விண்டோஸ் ஷ்நிப்பிங் டூல்(Snipping Tool) பயன்பாடுகள்
மைக்ரோசாப்ட் விண்டோவில் உள்ள எந்தவொரு இமேஜ், பிக்சர் மற்றும் விண்டோ திரையை நீங்கள் எளிதாக இமேஜ் பைலாக சேமிக்க முடியும். இதற்காக நீங்கள் எந்தவொரு விண்டோஸ் சாப்ட்வேர்-யையும் நிறுவ வேண்டியதில்லை. இதற்க்கு நாம் விண்டோஸ் 7-ல் உள்ள ஷ்நிப்பிங் டூல்-யை பயன்படுத்தபோகிறோம். இது மிகவும் எளிமையானது மற்றும் விரைவாக செயல்படும். ஷ்நிப்பிங் டூல்(Snipping Tool) பயன்படுத்தி எந்தவொரு ஸ்க்ரீன்யையும் இமேஜ் பைலாக அதாவது .PNG or JPEG ஆக சேமிக்க இயலும்.
ஸ்டெப் 1 :
விண்டோஸ் ஸ்டார்ட் பட்டனை அழுத்தவும். அதில் ஷ்நிப்பிங் டூல் என்பதை சொடுக்கவும்.
கிழே உள்ள மாதிரி படத்தை பார்க்கவும்.
ஸ்டெப் 2 :
இப்பொழுது, திரையில் உள்ள ஷ்நிப்பிங் டூல் விண்டோவில் நியூ என்ற
பட்டனை அழுத்தவும். அதன்பிறகு திரையில் உள்ளவற்றை உங்களுக்கு ஏற்ற அளவுகளில்
தேர்தெடுத்து சேமிக்கவும். தேர்தெடுத்த இமேஜ்யை கான்சல் செய்ய எஸ்கேப் பட்டனை
அழுத்தவும். இதுபோல் எல்லாவற்றையும் ஷ்நிப்பிங் டூல் பயன்படுத்தி இமேஜ் பைலாக
சேமிக்க இயலும்.



Comments