பிளாக்கர்.காம் ப்ளாக் போஸ்ட்டில் ரிலேட்டட் போஸ்ட் உருவாக்குவது எப்படி என்று தெரியுமா?
பிளாக்கர்.காம் ப்ளாக் போஸ்ட்டின் அடியில் Related Post உருவாக்கும் எளிய வழிகளைப்பற்றி நாம் பார்க்க போகிறோம்!
பிளாக்கர்.காம் என்பது ஒரு இணைய வலைபூ ஆகும். இதில்
நீங்கள் இலவசமாக வலைப்பூவை உருவாக்கலாம். இணைய வலைபூ ஒன்றை பிளாக்கர்.காம்-யில்
துவங்குவதற்கு ஒரு ஜிமெயில் கணக்கு இருந்தால் போதுமானது. இது பயன்படுத்துவதற்கு
மிகவும் எளிமையானது மற்றும் பிரபலமானது கூட எனவே பெரும்பாலனவர்கள் இதில் வலைபூ
கணக்கு வைத்துள்ளனர். இது கூகுள் நிறுவனத்தால் வழங்கபடுகிற ஒரு இணைய சேவை ஆகும்.
ப்ளாக் என்றால் என்ன?
ப்ளாக் என்பது ஒரு கலந்துரையாடல் மற்றும் இணைய
தகவல் பக்கம் இவற்றை நாம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறோம். இதைத் தான் நாம்
போஸ்ட் என்று அழைக்கிறோம். இந்த வலைபூ ஒரு தனி நபர் அல்லது சிறிய அமைப்பால் அல்லது குழுவால் இயக்கபடுகிறது. ஆனால், தற்பொழுது பெரும் நிறுவனங்களும் ப்ளாக்யை இயக்குகிறார்கள்.
ப்ளாக்கில் நீங்கள் உங்களுடைய கருத்துக்கள், தொழில் சார்ந்த தகவல்கள், உங்களுடைய
தனி திறமைகள் மற்றும் பலவற்றை பதிவேற்றம் செய்யலாம். உங்களுடைய கருத்துக்கள்
இணையத்தில் மிக விரைவாக சென்றடைய இது ஒரு எளிமையான வழி அல்லது சாதனம் ஆகும்.
இதற்க்கு நீங்கள் எந்தவிதமான பொருட்செலவும் செய்யவேண்டியதில்லை. உங்களுக்கு தேவை
ஒரு இணைய இணைப்புடன் கூடிய கம்ப்யூட்டர் மட்டுமே.
Rich Dad Poor Dad: What the Rich Teach Their Kids About Money That the Poor and Middle Class Do Not!
ப்ளாக்கில் நீங்கள் தொடர்ந்து எழுதும் போது
உங்களுடைய கற்பனை திறன், எழுதும் ஆற்றல், நினைவு ஆற்றல், சொற்கள் அமைக்கும்
முறைகள் போன்ற பல திறமைகள் உங்களிடம் வந்து சேரும் மற்றும் மெருகேறும். நம்மில் பலபேர்களுக்கு ஒரு
குறிப்பிட்ட துறையில் தனித் திறமைகள் இருக்கும். (உதாரணதிற்கு: சமையல் கலை,
கம்ப்யூட்டர், ப்ரோக்ராம்மிங், மூலிகை மருத்துவம், கட்டுரை எழுதுதல், சமுகம் போன்ற
துறைகளில்) இவர்கள் தங்களுக்கென்று ஒரு ப்ளாக் கணக்கு துவக்கி அதில் தங்களுடைய
படைப்புகளை எழுதி பதிவேற்றம் செய்தால் பலபேர் அவற்றை பார்வையிடுவார்கள். அதன்
மூலம் தங்கள் படைப்புக்களை பிரபலபடுத்தலாம். மேலும் தொடர்ந்து நீங்கள் உங்கள் ப்ளாக்யை
அப்டேட் செய்யும் போது மிக விரைவாக உங்களுக்கென்று வாசகர்களை பெறலாம். இதனுடன் கூடவே நீங்கள் உங்கள் ப்ளாக்கில் விளம்பரங்களை பயன்படுத்துவதன் மூலமாக குறிப்பிட்ட அளவு வருமானம் ஈட்டலாம் என்பது உறுதி.
Wordpress Mastery: Exactly How to Become a Wordpress Expert and Create Profitable Websites Blogs in Minutes
நீங்கள் இணையத்தில் உள்ள பல ப்ளாக்களில் போஸ்டின் அடியில் தொடர்புடைய போஸ்ட்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இது போல் உங்கள் ப்ளாக் போஸ்டில் நீங்களும் செய்யலாம். இவ்வாறு, உங்கள் ப்ளாக் போஸ்ட் அடியில் அதற்க்கு
தொடர்புடைய சில போஸ்ட்களை காண்பிப்பதன் மூலம் வாசகர்களை தொடர்ந்து உங்கள்
ப்ளாக்கில் இருக்க அல்லது பார்வையிட செய்யலாம். சரி நாம் அதற்குரிய எளிமையான வழிகளை பற்றி இப்போது கீழே
பார்க்கலாம்.
- http://www.linkwithin.com/ என்ற இணைய தளத்திற்கு செல்லவும். அங்கு உள்ள முகப்பு பக்கத்தில் உங்கள் ஈமெயில், ப்ளாக் அட்ரஸ், எந்த பிளாட் பார்மில் உங்கள் ப்ளாக் உள்ளது என்பதை தெரிவு செய்யவும். மேலும் width என்பது எத்தனை போஸ்ட் தெரியவேண்டும் அதாவது ஓன்று அல்லது அதற்க்கு மேல் போன்ற தகவல்கள். பிறகு Get Widget என்ற பட்டனை அழுத்தவும்.
- இப்பொழுது ஒரு புதிய இணைய பக்கம் ஓன்று
திறக்கும். அதில் Install Widget என்ற லிங்க்யை கிளிக் செய்யவும்.
- இப்பொழுது மேலும் ஒரு புதிய பக்கம் ஓன்று தோன்றும்.
அதில் உங்கள் ப்ளாக் கணக்கு உள்ள ஜிமெயில் கணக்கை தெரிவு செய்து லாக் இன்
செய்யவும். அதன்பிறகு உங்கள் பிளாக்கர் டஷ்போர்ட்டில் Layout என்பதை தெரிவு
செய்து, அங்கு Add A Gedget –யை கிளிக் செய்யவும்.
இப்பொழுது அதனை ப்ளாக் போஸ்ட்டின் அடியில் கொண்டுவரவும். அதன் பிறகு Save செய்யவும். மேலே உள்ள படத்தை பார்க்கவும். நாம் இப்பொழுது தேவையானவற்றை எல்லாம் செய்து முடித்துவிட்டோம். ப்ளாக்யை ரன் செய்து இணையத்தில் பார்க்கவும்.
Comments